aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Saturday, 27 August 2011

24. இயல்பான ஏழாவது அறிவு

24. இயல்பான ஏழாவது அறிவு


                ``இயல்பான ஏழாவது அறிவைக் கொண்டு மனிதன் நிறைவாக வாழ்கின்றான்’’.

                ``இயல்பான இவ்வுயரிய சக்திகள் உயிரிலும், உடலிலும் வெளிப்பட்டது போலவே மனத்திலும் வெளிப்படுவதுதான் இயல்பான ஏழாவது அறிவாகும். இது உயரிய வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகை செய்கிறது’’.

                இயற்கையை வழிபடுவது தொன்றுதொட்டே இருந்து வந்த பழக்க மாகும். ஆதிகாலத்திலிருந்தே எல்லா மதங்களும், நாகரிகங்களும் இயற்கையை வழிப்பட்டு வந்துள்ளன. இயற்கையென்றால் ஏதோ நம் கண்முன்னே காணும் மரங்கள், ஆறுகள், மலைகள், கடல், வானம், செடி, கொடிகள் என்பது மட்டுமல்ல. இயற்கையென்றால் பிரபஞ்சம். இவ்வகையில் நம் கண்முன்னே வெளிப்பட்டு நாம் ஆச்சரியப்படும் வகையிலும், வெளிப்படா வகையிலும் இயற்கை இருவகையில் விளங்குகிறது. வெளிப்படாத தன்மை கொண்ட இந்த இயற்கை ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு இயல்புணர்வு கொண்டு படைத்துள்ளார். அதன் இயல்புணர்வை அறிந்து ஒவ்வொரு உயிரினமும் அதற்கெற்ப வாழ்ந்து வருகின்றது. சாலமன் மீன், செந்நிற நாரை போன்ற அனைத்து உயிரினங்களும் தன் இயல்பை ஒட்டியே வாழ்கின்றன. இதன் இயல்பு நிலை சிந்தனை குழப்பத்திற்கு அப்பாற்பட்டது. நேற்று என்றும் நாளை என்றும் அதற்கு இல்லை. அது ஆற்றல் வாய்ந்தது; உயிர்த்துடிப்புக் கொண்டது; இலக்கை அடைய வல்லது; ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அடங்கும் இயற்பாட்டைக் குறிப்பதுவே இயல்பு.
                நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை கவனித்தால் உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதை அறியமுடிகிறது. சூழ்நிலைப் போக்குகளை சமாளித்து நடந்துகொள்ள உயிரினங்களுக்கு அவற்றின் இயற்கையின் இயல்பு உணர்வு உதவுகிறது என்பது மட்டுமே நமக்கு நன்றாகத் தெரிகிறது. தங்கள் இலக்குகளைப் பற்றிய உணர்வு உயிரினங்களிடம் இயற்கையாகவே அமைந்திருக்கின்றன. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒருவிதத்தில் உயிரினங்கள் இலக்கை அடைவதற்கு இதன் இயல்புணர்வு செயல்படுவதாகச் சொல்லலாம்.
                இதே முறையில் நாம் வெற்றிக்கான வடிவமைப்பும் நம்மிடம் இருக்கிறது. நம் இலக்கை நோக்கி செலுத்துகின்ற அமைப்பு நம்மிடமும் அமைந்து இருக்கிறது. நம்முடைய சிந்தனைத் திறமையை வைத்துப் பார்க்கும் போது நம்முடைய மனமும், நாமும் (உடலும், உயிரும்) இணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. இப்படி இணைந்து செயல்படும் போக்குகளை நிர்ணயிப்பதைக் கொண்டு நமது சாதனைகளும் அதன் விளைவுகளும் ஏற்படுகின்றன. மனிதன் தன் இயல்புணர்வை அறிவதே மெய்யுணர்வைப் பெறுவதற்கு முதல் படியாகும்.
                புறப்பொருளின் அறிவை பெருக்கும் திறனை அதிகரிக்க முயல்கின்றோம். எத்தனை எத்தனை நூல்களைப் படிக்கின்றோம்; எத்தனைத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை உற்றுக் காண்கிறோம்; எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றோம்; கூடிப் பேசுகின்றோம். இவைகளின் வாயிலாகப் பெறப்படும் செய்திகள், தகவல்களே தவிர உண்மையறிவு ஆகாது. நீங்கள் இயற்கையோடு தொடர்பு கொள்வீர்களானால் பறவை தன் சிறகினை அடித்துக் கொண்டு பறப்பதைப் பார்ப்பீர்களானால்; மலைச் சரிவுகளில் மோதும் மேகங்களை நோக்குவீர்களானால்; தென்றல் காற்று வீசுவதை அறிவீர்களானால் இதைப் போன்ற அனைத்திலும் உள்ள இயல்பை அறிந்தால் மனத்திற்கு ஒரு நிறைவு வந்து சேர்கிறது. இதன் நிறைவு அதிகரிக்க வேண்டுமானால் சிந்தனைகளை உயரிய சிந்தனைகளாக மாற்ற வேண்டும். உயரிய சிந்தனை என்பது புறப்பொருள்களின் சிந்தனைகளுடன் நமது அக வாழ்வுச் சிந்தனைகளும் இணைந்து மெய்யான தெளிவைப் பெறுவது ஆகும். இதனால் உள்ளபடி சிந்திக்கச் செய்கின்றது. இதனை உணர்வதற்கு மிக ஆழ்ந்த உயரிய சிந்தனைகளுடன் இயல்புணர்வைப் பற்றிய ஆராய்ச்சி தேவை.
                இயற்கையன்னையின் இயல்புணர்வு ஒரு சிறப்பான இயல்பான செயல்பாடாகும். அது பல வகையாக வகுக்கப்பட்ட, சிறப்பாக வரையறுக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். இது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொருவருடைய நற்பண்புகளும், நல்லொழுக்கமுமே இவற்றின் மதிப்பீடுகளை நல்கும். இவற்றை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் இயல்புணர்வைப் பற்றிய உயரிய சிந்தனைகளை அறிய முடிகிறது. நம் செயல் அனைத்தும் கர்மயோக சேவையில் தெளிவடையச் செய்கிறது. இதனால் உலகில் வாழ்வது வெகு எளிமையானதாகவும், சுலபமானதாகவும் அமையும். இதனால் தன்னையே அறிந்து கொள்ளவும் தன்னையே அனுபவித்து உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. இது தன்னையே அறிந்து கொள்ளும் அறிவாகும். இதனால் மனிதன் மனித நிலையில் இருந்து உயர்ந்து அடுத்த நிலைக்குச் செல்லலாம்.

                இது சாதாரணமாக வெளிப்படாமல் உள்ளங்களிலிருந்தும் இயல்பான உணர்வுகளிலிருந்தும், உயரிய சிந்தனைகளின் வழியாகப் படிப்படியாக வளர்ந்து நிலையான இயல்புணர்வை அறிய செய்கிறது. இது வரையறுக்கப்பட்ட ஒரு செயல்முறை. அது மானிட குலத்தின் எதிர்கால வாழ்க்கைக்கு உயிரூட்டவல்ல மூலசக்தி. இப் பிறவியிலேயே அறிய வேண்டுமென்றால் நீங்கள் இந்த நிலையான இயல்புணர்வை உணரும் வரை ஓய்ந்து விடாதீர்கள்! ஒவ்வொருடைய  தனித்தன்மையாகிய இயற்கையின்  நம்மிடம் உள்ள உணரும் இயல்புணர்வை உணர வேண்டியுள்ளது. இது நிலையானது, மாற்றமற்றது. இதனால் அவனுடைய ஆசைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், கனவுகள், லட்சியங்கள், கோபம், மதிமயக்கம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் இவை அனைத்தும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இயல்பை மனத்திற் கொண்டு சென்று இயல்புணர்வால் இயற்கையின் சக்திகளை இயல்பாக உணர்வது தான் இயல்பான ஏழாவது அறிவாகும். இது வாழ்க்கையில் மனவளம் நிறைந்ததாக மாற்றி நிறைவாக வாழ வழிவகை செய்யலாம்.

                இயல்பான ஏழாவது அறிவு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஆழ்மனதில் உள்ள இயல்பான இயல்பாகும். இந்த இயல்பு நிலையில்தான் எதனையும் முழுமையாக அறிய முடியும். இது இயல்புணர்வு மூலம் ஆழ்மனதை இயக்கி மனித இனத்தின் இலக்கை அறிய முடியும்.

                ``இயல்பான ஏழாவது அறிவை சரியாக புரிந்து கொள்ளுதலே வாழ்க்கையில் தன் இயல்பை விரைந்து அறிவதற்கு சிறந்த வழி’’.

Wednesday, 24 August 2011

23. இயல்பான சேவை




23. இயல்பான சேவை
          ``நம்மைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொண்டதை, இயல்பான சேவையில் நம்மைப் பற்றி எளிதில் புரிந்து உணரச் செய்கிறது’’.
       இயல்பான சேவையில் ஈடுபட்டு வாழும் வாழ்க்கையே சிறந்த நெறியான வாழ்க்கையாக அமையும். ஒவ்வொருவரும் முடிந்த அளவு சேவை செய்வதால் இந்தச் சமுதாயம் பெருமளவு முன்னேற்றம் அடைகிறது.
வளர்ந்த இன்றைய சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் துன்பத்தை நினைந்து கஷ்டப்பட்டுக் காலத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கின்றோம். இந்தச் சூழ்நிலையில் சேவையில் செயல்களை அறியச் செய்து, நிறைவான வாழ்க்கை வாழ வழிவகை செய்கின்றது. நம்முடைய உடல் செயல் புரிவதற்கான கருவியாகும். தனக்காகச் செய்யும் செயல்களுடன் பிறருக்காகவும் நாம் செய்யும் செயல்தான் இயல்பான சேவையாகும்.
         இயல்பான சேவையைச் செய்து கொண்டு வாழ்க்கையை ஆராய்வோமானால் மனதைப் பற்றிய உண்மை நிலையை அறிய முடியும். இவ்வளவு உயர்ந்த இதனை அனுபவித்து அறிய வேண்டிய உண்மையே தவிர வெறும் வார்த்தை ஜாலமல்ல. எவ்வளவுதான் பேசினாலும், அல்லது அறிந்து வைத்துக் கொண்டாலும் அது சேவையாகாது. ஆகவே வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் உண்மையைப் பார்க்கவே நாம் முயல வேண்டும். விஞ்ஞானத்தில் உள்ளது போல இதில் உள்ள உண்மைகளை நாம் கண்டு அறிந்து உணர முயல வேண்டும். இதைச் செய்து கொண்டு ஆராய்ச்சி செய்தால் அந்த உண்மையை அறியலாம். எப்போதும் புரிந்து கொண்டு மனத்திலும் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதனால் மனிதர்களிடையே நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு சண்டை மற்றும் பூசல்களும் மறையும். வாழ்க்கையில் ஒரு உன்னத அனுபவம் ஏற்படும்.
      இவ்வுலகில்தான் நம்மால் இயல்பான சேவை செய்திட முடியும். மற்ற உலகில் இல்லை. இந்த மனிதப் பிறப்பில்தான் நாம் இயல்பான சேவை செய்திட முடியும். இது நமக்கு கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பாகும். இதனால் தான் நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த இடத்திற்குச் செல்லும் சரியான பாதையை அறிய முடியும். அதற்கு வழிகாட்டுவதுதான் இயல்பான சேவை. மற்ற எல்லா வழிகளும் சுற்றுப் பாதையாகும். அவ்வளவு சிறப்புமிக்க இதை உணர்ந்துச் செயல்படும்போது விரைந்து இலக்கை நோக்கிச் செல்லலாம்.
     புத்தகங்களும், கொள்கைகளும் போதும், இயல்பான சேவைதான் அனைத்திலும் சிறந்தது. ஆரம்ப நிலையில் கவர்ச்சியில் மயங்கி அவர்களிடம் உள்ள குறுகிய நோக்கம், பரந்த மனப்பான்மைக்குத் தடையாக நின்று அதற்கு அப்பாலும் உள்ளவை எல்லாம் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்து விடுகின்றன. ஆனால் இயல்பான சேவையால் தேவையற்ற உலகப்பற்றுதலில் இருந்து விடுபடுகிறோம்.
     நாம், இயல்பான சேவை என்னும் மார்க்கத்தில் நடக்க வேண்டும். அதுவே நல்லது. அப்போதுதான் மகான்கள் எய்திய நற்பேறு நிலைகளை நாமும் அடைய முடியும்.
     ஆற்றுகின்ற சேவையின் அளவு முக்கியமல்ல; அதனுடைய தரம் மட்டுமே முக்கியம். சேவை என்பது பலனை எதிர்பார்க்காமல் ஆற்றுகின்ற செயலேயாகும். எந்தச் செயல் பண்பட்ட செயலாக அனைவரின் முன்னேற்றத்தைத் தூண்டிவிடுகின்றதோ அதுவே உண்மையான இயல்பான சேவையாகின்றது. இயற்கை சக்திகள் அனைத்தும், தமக்காக என்று எந்தச் செயலும் செய்யாமல், பிறருக்காகவே செயல்களைச் செய்கின்றன. ஐந்தறிவுள்ளவை தமக்காக மட்டுமே செய்லகளைச் செய்கின்றன. ஆனால் ஆறு அறிவுள்ள மனிதர்கள் தமக்கும் பிறருக்குமாகச் செய்லகளைச் செய்கின்றனர். அதனைச் சீர்மைப்படுத்தி பிறருக்காகவும் முடிந்தவரை செய்கின்ற செயலே சிறந்த இயல்பான சேவையாகக் கருதப்படுகிறது.
        “இயல்பான சேவையில்தான் மனிதன் மனம் நிறை நிலையை அடைவதற்கு சிறந்த அனுபவம் கிடைக்கிறது. இந்த அனுபவம் தன்னை அறியச் செய்கிறது.”.




22. இயல்பான சேவை செய்யும் கலை



22. இயல்பான சேவை செய்யும் கலை
`      `இயல்பான சேவையை ஒரு கலையாக கற்பிக்கும் போது நம் அனைவராலும் இயல்பாக உருவாக்கப்பட்ட சிக்கலான இந்த உலகில் வாழ்வது எளிதாகிறது.
       இயல்பான சேவை செய்து வாழ்வதே ஒரு சிறந்த கலையாகும். எல்லோருக்கும் முடிந்த அளவு சேவை செய்து நம்மைச் சுற்றிலும் வளத்தைப் பெருக்கிக் கொள்வதைவிடச் சிறந்த நுண்கலைவேறு எதுவுமே உலகில் இல்லை.
     இந்த வளர்ந்த சமுதாயத்தில் சேவை பற்றிய கருத்துக்கள் தெரிந்தும்கூட, சரியான நடைமுறை வழி நடத்தப்பட இயலாத காரணத்தால் இதன் புனிதத்தைத் தொடர்ந்து அறியும் வாய்ப்புக் கிட்டுவதில்லை. எனவே வணிக இயல்பான சேவையை ஒரு கலையாகக் கொண்டு நடைமுறைப்படுத்திச் செயல்படும்போது, எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது; அன்பை வெளிப்படுத்துகின்றது. பகுத்தறிவை உண்டு பண்ணுகின்றது. இகப் புத்தியினைக் குறைக்கின்றது. வேற்றுமைகளைக் களைகின்றது. ஏற்றத் தாழ்வுகளை குறைக்கின்றது. அனைவருக்கும் நிறைவு நிலையை உண்டு பண்ணுகின்றது.
     இயல்பான சேவையில் உள்ள உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறவில்லை. போதிய அளவு விளக்கப்படவில்லை. போதிய அளவு அறியப்படவில்லை. நாம் அறிந்த அன்னதானம், பிச்சைக் காரர்களுக்கு உதவுவது போன்ற சிறுசிறு நிகழ்வுகளையே சேவை என்று எண்ணுகிறோம். அது சேவையின் முழுப் பலனையும் கொடுக்கவில்லை. எனவே இதைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமானால் அதை ஒரு கலையாகவே நாம் கற்பிக்க வேண்டும். அப்போதுதான் இதன் புனிதத்தை அறிய முடியும்.
     இயல்பான சேவையை அனுபவித்து உணர்ந்து நிறைவு அடைவதுதான் உயர்ந்த சிறந்த நிலையாகும். இந்த உயர்ந்த நிலைக்கு அனைவரையும் அழைத்துச் செல்லும் முறைதான் இயல்பான சேவை செய்யும் கலையாகும்.
இயல்பான சேவை செய்யுங்கள் அதோடு நல்லவனாக இருங்கள். இதுதான் சிறந்த கலையாகும். இந்த வாக்கியம் சாதாரணமாக இருந்தாலும் இதைத் தொடர்ந்து செய்தால் அநேக இரகசியங்களை எளிதில் அறிய முடியும். இதை ஒரு கலையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தும்போது படிப்படியாக உண்மை களை அறியச் செய்து இறுதியில் உங்களை முதிர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
    இயல்பான சேவை செய்யும் கலையில் நிறையப் பயன்கள் உள்ளன எனத் தெரிந்து வைத்துள்ளோம். இயல்பான சேவை செய்யும் கலையை முறையாக வரையறை செய்து, முறையாகச் செயல்படுத்த வேண்டும். இயல்பான சேவை செய்யும் கலை நம்முடைய வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடங்களில் ஒன்றாகும். இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நாம் எப்போதும் கற்றுக் கொண்டு வந்திருக் கின்றோம்.
     இயல்பான சேவையின் நுண்கலை என்பது அனைத்தையும் இறைவனின் படைப்பாகக் கருதுவதும், அன்பு செலுத்தும் மனோசக்தியை நாம் பெற்றிருப்பதும் இதன் சிறப்பாகும். அதனை நம் உள்ளங்களில் வளர்த்துப் பெருக்கிச் செழிப்பாக்க வேண்டும். இதனால் மட்டுமே உண்மையான விடுதலையைப் பெறமுடியும்.
     இம்முறையில் ஆக்கப்பூர்மான ஆற்றலை விழிப்படையச் செய்து விரிவடைந்து பெருகிப் பரவச் செய்கின்றது. இந்த உயிர்த் துடிப்பான உள்முக ஆற்றலைத் தூண்டிப் பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது. இயல்பான சேவையின் தொடக்கம், அளவற்ற வளர்ச்சியின் அனுபவம் அன்பின் முதிர்ச்சிக்கு நம்மை அழைத்துச் சென்று நமது வாழ்க்கையை முழுமையுறச் செய்கின்றது.
இதனை ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து கொண்டு மன நிறைவுடன் அன்றாடம் செயல்பட வேண்டியது அவசியம். நம் கர்ம வினையைக் குறைக்க இயல்பான சேவை செய்கிறேன் என்ற உயரிய கொள்கையை மேற்கொண்டால் சீரிய வாழ்க்கை முறை உருவாகும். சேவை செய்யும் கலையால் பணியிலேயே நிறைவைக் காண முடியும்.
       “இயல்பான சேவையை அனுபவித்து தன்னை உணர்ந்து நிறைவு அடைவதுதான் உயர்ந்த சிறந்த கலையாகும்.
6. இயல்பான சேவையில் ஒன்றிய உள்ளானந்தம் தான்
   ``இயல்பான சேவையின் உயர்ந்த நிலை வெளிப்பாடு உள்ளானந்தம்’’.
   இயல்பான சேவை வாழ்க்கையுடன் இணைந்து வாழப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்தால், உள்முக யாத்திரைக்கு அது வழிக்காட்டும். வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம், அணுகுமுறை அனைத்தும் மாறும். பின் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்த நிறைவு நமக்கு ஏற்படும். இந்த நிறைவுதான் உள்ளானந்தம். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளானந்தம் அறிய முடியாமல் மறைக்கப்பட்டுள்ளது. வானத்தில் நட்சத்திரங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் நம் கண்ணுக்கு இரவில் மட்டும் தெரிகிறது; பகலில் மறைவதுபோல இருக்கிறது. ஆனால் அவை தோன்றுவதும் இல்லை; மறைவதும் இல்லை; அவ்வாறாக நமக்குக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளானந்தம் உள்ளது. அது அறியப்படாமல் இருக்கிறது. நேர், எதிர் இரண்டினாலும் உந்தப்பட்டு நாம் காரியங்களைச் செய்துகொண்டே இருக்கிறோம். நாம் இவற்றிலிருந்து விடுபட்டு இயல்பான சேவை செய்தால் உள்ளானந்தத்தை அறிய முடியும்.
    உள்ளானந்தத்தை உணருங்கள்; வெறும் பேச்சால் அல்ல. பெரியது எல்லாம் பெரியதாக உள்ள மெய்ப் பொருளின் ஒரு துகள்தான் எல்லா ஜீவராசிகளிலும் உள்ளது என்ற எண்ணம் இயல்பான சேவையில்தான் மிக எளிமையாகத் தெளிவாக அறிய முடியும். மற்ற எல்லா வழிகளும் கடினமானவைதான். இந்த இயல்பான சேவை முறையை எல்லா இதயங்களிலும் ஏற்படுத்தி அவற்றை நம் புதிய கோணத்தில் செயல்படுத்தும்போது அந்த இயல்பான சேவை புனிதத்தன்மை பெற்றுவிடும்அப்போதுதான் அவற்றின் உண்மையைப் புரிந்து உள்ளானந்தத்தை அறியமுடியும். இந்த ஆனந்தத்தை இயல்பான சேவையின் உண்மையைச் சிறு அளவாவது முதலில் அறிந்து கொள்ள வேண்டும். முதலில் அவற்றை விட்டு விடுகிறோம். பிறகு அவை தெய்வீகத் தன்மை பெற்று நம்மிடமே திரும்பி வருகின்றன. அப்போது உள்ளானந்தம் ஏற்படுகின்றது. அப்போது நம்முடைய துன்பம், துக்கம், நமது அற்ப சந்தோஷங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறையும். இந்த உள்ளானந்தம் அடையும் காலம் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப வெளிப்படும். அதுவரை நாம் இயல்பான சேவை செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த உள்ளானந்தத்தைப் பேச்சாற்றல் மூலமோ, பரந்த அறிவின் மூலமோ, வேதங்களைப் படிப்பதன் மூலமாகவோகூட எளிதில் உணர முடியாது. ஆனால் இயல்பான சேவையில் எளிதில் உணர முடியும்.
     இயல்பான சேவையால் மனம் பண்படத் தொடங்கும். இந்த இயல்பான சேவை பரம்பொருளின் சேவையாக ஆக வேண்டு மென்றால் உள்ளானந்தப் பரவசத்தோடு நீங்கள் செய்கின்ற இந்த இயல்பான சேவைப் பரம்பொருளுக்குச் செய்கின்ற சேவையாக ஆகிவிடும்.
    இந்தப் புரிந்துணர்தலுடன் நீங்கள் சாந்தத்திற்குள் பிரவேசிப்பீர்கள். ஏனெனில் இது இயல்பான சேவையை ஒட்டிய உள்ளானந்தம். இதுவே மாற்றவியலாத களிப்பு; இதுவே கட்டுப்படுத்தப்படாத அறிவு; மாசுபடுத்தப்படாத ஞானம்; தீராத அன்பு மற்றும் பரிபுரண அமைதி எய்துதல் ஆகும்.
     ஜீவராசிகளுக்கு உள்ளானந்தத்துடன் இயல்பான சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான். இயல்பான சேவையில் உள்ளானந்தம் அடைவதன் மூலம்தான் மெய்ஞ்ஞானம் அடைகின்றான். மெய்ஞ்ஞானம் அடையப் பெற்றவன் எப்போதும் மயக்க வயப்படுவதில்லை. இந்த நாகரீக வாழ்க்கையில் எல்லாவற்றையும் பகுத்தறிந்து அறிவாளிகள் மத்தியில் அறிவாளியாக, மேதைகள் மத்தியில் மேதாவியாக, துன்பமுறுபவரிடம் இரக்கமுள்ளவனாக, ஆனந்தத்தில் இருப்பவரின் சந்தோஷத்தில் மகிழ்பவனாக, மெய்ஞ்ஞானிகள் இடையில் மெய்ஞ்ஞானியாக, இளையோர் மத்தியில் இளைஞனாக, பேச்சாளர் அவையில் சிறந்த பேச்சாளராக, இல்லறத்தார் இடையே கடமையுள்ள இல்லறத்தானாக, துறவிகளிடையில் முற்றும் துறந்தவனாக இருக்கின்றான். எல்லாவற்றையும் வென்ற சிறந்த ஒருவனாகத் திகழ்கின்றான்.
          “இயல்பான சேவையில் உள்ளானந்தம் அடைவதன் மூலம் நமக்கு ஞானம் ஏற்பட்டு நிறைவாகப் பணியாற்றி இயல்பு நிலையை அடையலாம்.