aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

10. எ.எ.எ.யின் இயல்பான வர்த்தகம்


10.  ...யின் இயல்பான வர்த்தகம்
``... வணிகம் அனைவரது வாழ்வில் விழிப்பை ஏற்படுத்தி மலர்ச்சியைக் கொடுக்கிறது’’.
                நாள் தோறும் வளர்ந்து வரும் இன்றைய உலகில் வர்த்தகத்தின் அடிப்படை நோக்கம் குறைந்து, வர்த்தகம் வளர்ந்து கொண்டு வருகின்றது. இதனால் மக்களிடம் பெரும் ஏற்றத் தாழ்வுகள், போட்டி அதிகரிக்கின்றன. இதைத் திரும்பவும் புனிதப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ... நெட்வொர்க் மார்க்கெட்டிங் முறை ``நேரடி ... விற்பனை’’ முறையைப் பயன்படுத்துகிறது.
                ...யின் இயல்பான வர்த்தகம் வரையறுக்கப்பட்ட சேவையுடன் கூடிய வர்த்தம் ஆகும். இதன் செயல்திறன் காலத்திற்கு ஏற்றவாறு வரையறுக்கப்படுகிறது. இது குழுக்களாகச் சேர்ந்து ஒருங்கிணைந்து நடத்தப்படும் வர்த்தகம். இதன் புது அர்த்தங்களையும் ஊக்கமுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை புகுத்தி ...யின் மந்திரங்களை ஒவ்வொருவரும் மனத்தில் கொண்டு முழுமையாக ஈடுபட்டுச் சிறந்த வர்த்தகங்களாக நடத்தப்படும் வர்த்தகமாகும்.
    எ... நெட்வொர்க் மார்க்கெட்டிங்கிற்கு நவீன தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் உதவி புரிகிறது. கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதால் நெட்வொர்க்கின் நிர்வாகத்தைச் சரியான வழியில் நடத்த முடிகிறது. தொடர்ந்து நவீன மயமாக்கப்படும் இந்த தொடர்பு சாதனை அமைப்புகளால் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இது தகவல்களை தொகுத்து ஆராய்ந்து, ஒருங்கிணைத்து இணையதளத்தில் வடிவமைத்துச் செயலாற்றும் வர்த்தகமாகும். புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் இந்த இணையத்தளம் படிவங்களில் சேர்ப்பர். இதில் என்ன பொருள்களை வாங்கலாம். அவற்றின் விலை, டெலிவரி, காலம், அதன் தரம், நுணுக்கங்கள் போன்ற அனைத்து விவரங்களும் புதுமையான நவீன தகவல் பரிமாற்றத்தில் கிடைக்கும்.
                ... நெட்வொர்க் மார்க்கெட்டிங் முறை சேவையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது பொருள்களையும், சேவை முறையில் விநியோகம் செய்ய உதவும் மிகப்பெரிய வழியாகும். இதில் பல மையங்கள் ஒன்று இணைவதால் இதன் பலம் கூடிக்கொண்டே இருக்கும்.
    இதில் வினியோகத் தொடர் வழியில் உள்ள பல பெரிய தொடர்புகளை நீக்கி விடுவதால் இந்த முறை வினியோகச் செலவுகளை மிகவும் குறைவடையச் செய்கிறது. இதில் வியாபார இடைத் தரகர்களை நீக்கி விடுவதால் பொருளின் விலை குறையும். இந்தச் சூழ்நிலையில் உற்பத்தியாளரிடமிருந்து வாடிக்கையாளரைச் சென்றடையும் வினியோக வழியின் கடைசித் தொடர்பு உறுதிப்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் தனக்குத் தேவையான பொருள்களை இருக்கும் இடத்திலேயே அருகில் உள்ள மையத்தில் வாங்க முடியும். பல கடைகளுக்கு சென்று நேரத்தை இழப்பதற்குப் பதிலாக, அவர்கள் விரும்புவதை எங்கு, எப்பொழுது தேவையோ, அந்த நேரத்தில் அங்கேயே இந்த திறமையான சேவையின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
                இந்த வணிகத்தில் கனிவும், பண்பும் கலந்திருக்கும். பொருள்களின் விலைகளில் நியாயம் இருக்கும். வாங்கும் பொருள்கள் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு உரிய மதிப்பு உடையதாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவு தரக் கூடியதாக இருக்கும். இந்த வர்த்தகத்தில் ஆலோசனையும் வழங்கப்படுகின்றது. இவற்றைப் பற்றி எல்லாவற்றையும் விரிவாக இணையதளத்தில் யயய உநவேநச.டிசப என்ற முகவரியில் அறியலாம்.
     விற்பனைக்கிருக்கும் பொருள்கள், அவற்றின் விவரங்கள் போன்ற அனைத்தும் இணைய தளத்தில் இருக்கும். நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பொருள்களை கொடுக்க முடியும். பொருள்களின் குறியீட்டு எண். (Order Code No.) அளவு (Mantify) விலை (Rate) இவற்றை ஆர்டர் படிவத்தில் நிரப்பி பொருள்களை வாங்க முடியும். பொருள் குறிப்பிட்ட காலத்தில் வீடு தேடி வரும்.
      இந்த வர்த்தகம் சேவையை மையமாகக் கொண்டு செயல் படுவதால் இதில் பொருளை வாங்குபவர், பொருளை விற்பவர், இருவருக்கும் ஒரு நிறைவு இருக்கும். இந்த வர்த்தகத்தில் சேவையின் பலனை நம்மால் அறியமுடியும்.
       இதன் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் நிறையச் சேவைகளைச் செய்ய ஏதுவாக உள்ளது. இதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றது. ஒவ்வொருவரிடமும் உள்ள தெய்வீக ஆற்றலை அறியச் செய்கிறது. கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து துறைகளும் மேம்படுத்த உதவுகின்றது. இதனால் வாடிக்கையாளர்களின் பலன்களும் அதிகரிக்கப்படுகிறது. இது கனிவும், பணிவும் கொண்ட வர்த்தகம், போலிகள் தவிர்க்கப்படுகின்றன, தரமும் நிறைவும் இருக்கின்றது.
                இந்த உற்பத்தியாளர் மார்க்கெட்டிங் பெரிய பாலமாக அமைந்து நுகர்வோருக்கு நேரடியாக பலனை எடுத்துச் செல்கின்றது.
                வினியோக°தர்கள் அவர்களது ... மையத்துடன் சேர்ந்து பணிபுரிந்து மற்ற ... மையங்கள் மூலம் வாங்குபவர் களுக்கும் பலனளிக்கப்படுகிறார்கள்.
                இந்த ... நெட்வொர்க் மார்க்கெட்டிங் முறை இன்றைய காலத்திற்கு பொருத்தமானது. சமூக சேவகர்கள் ஒன்று இணைந்து இந்த வணிகம் நடத்தப்படுவதால் ஏற்ற தரம் மேலும் மேலும் முன்னேற்றம், தொடர்ச்சியான மேம்பாடு அடைய செய்து வாடிக்கையாளர்களுக்கு முழு நிறைவு ஏற்படுத்துகிறது.
    நாம் எல்லோருமே இந்த வர்த்தகத்தின் அமைப்பில் இருக்கின்றோம். சேவை என்ற மிகப் பெரிய கூட்டமைப்பில் நாம் ஒவ்வொருமே நிறைவாக இருக்கின்றோம். இதனால் உங்களுடைய உண்மையான நிலையை நோக்கி செல்ல முடிகிறது.
``நீயும் அவனே நானும் அவனே அதுதான் இயல்பு’’
                ... = இயல்பு.







No comments:

Post a Comment