aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

13. எ.எ.எ. சமூக சேவகர்கள்


13. ... சமூக சேவகர்கள்
   ``... சமூக சேவையால் வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம், அணுகுமுறை அனைத்தும் மாறி வாழ்க்கையின் அற்புதத்தை உணர்த்தி நிறைவுடன் வாழ வழிவகுக்கிறது’’.
   சமூகப் பணி என்பது மனித வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் வகுக்கப்பட்ட நெறி முறைகள் மூலம் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவல்ல ஒரு துறையாகும். இதனைப் புதிய நடைமுறை வழிகளில் ஒருங்கிணைந்து, மனித வாழ்க்கை நிலையை உயர்த்தச் செயல்படுபவர்கள்தான் ...யின் சமூக சேவகர்கள்.
   இந்த வளர்ந்த சமுதாயத்தில் சேவைபற்றிய கருத்துகள் அனைத்தையும் தெரிந்தும்கூடச் சரியான முறையில் வழி நடத்த இயலாத காரணத்தால் நமக்குச் சேவையின் சிறப்பை அறியும் வாய்ப்புக் கிட்டியதில்லை. இயல்பான சேவையை அனுபவித்து உணர்ந்து நிறைவு அடைவதுதான் சிறந்த நிலை. இந்த உயர்ந்த நிலையை மக்கள் அனைவரும் அறியச் செய்பவர்களே ...யின் சமூக சேவகர்கள்.
  இயல்பான சேவையில் ஈடுபட்டு வாழும் வாழ்க்கையே சிறந்த நெறியான வாழ்க்கையாக அமையும். ஒவ்வொருவரும் முடிந்த அளவு சேவை செய்வதால் இந்தச் சமுதாயம் பெருமளவு முன்னேற்றம் அடைகிறது. இயல்பான சேவையில் பணியாற்றுவது நாம் இறைவனுக்குச் செய்யும் சிறந்த பணியாகும். இங்கு இறைவனும் நாமும் இணைந்து இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதால் இதனை ஒரு தூய வேள்வியாகக் கருதி அதற்கான உண்மையான பொதுச் சேவையை ஆற்றிட முன்வர வேண்டும்.
   எ... இயக்கம் சமூக சேவையைப் புதிய கோணத்தில் ஆய்வு செய்து, தகுந்த வழிமுறைகளைக் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைச் செய்து, அனைவரையும் சமூக சேவகர்களாக மாற்றுகின்றது. ஒவ்வொரு சமூக சேவகரும் ஒன்றுபட்ட கருத்துடன் சமுதாயத்தின் வேறுபாடுகளைக் குறைக்க வழி வகைகளை செய்வர். கொடிய ஏழ்மையை அகற்றுவது, தரமான கல்வி முறையை அளிப்பது மற்றும் நோயாளிகளைக் கவனத்தில் கொண்டு உதவுவது போன்ற செயல்களைச் செய்வர். மற்றும் நல்ல ஆன்மீகச் சிந்தனைகளை மக்களுக்குப் புகட்டுவது, மக்களை நேரிய வழியில் நெறிப்படுத்துவது போன்ற அனைத்துச் சேவை களையும் பார்வையிட்டு முழுமனத்துடன் செயல்படுபவர்களே சமூக சேவகர்கள்.
    இந்தச் சமூக சேவகர்களின் பணியினைச் சீரிய முறையில் மேம்படுத் அவர்களுக்குத் தக்க பயிற்சிகள் அளிக்கப்படும். திறமைமிக்க வல்லுநர்களைக் கொண்டு பாடத்திட்டங்களை வகுத்து அதற்கான நிலைகள் வகுக்கப்படுகின்றன. சமூக சேவகர்கள் ஒன்றிணைந்து ஆங்காங்கே சிறந்த புதிய கருத்துக்கள் கலந்தாய்வு செய்ய அது வழிவகை செய்யும். இந்தச் சமூக சேவகர்களுக்கு அவர்கள் செய்யும் சேவைக்கு ஏற்ற அடிப்படை ஊதியம் கிடைக்க ...யின் கூட்டு வணிகத்தில் வழிவகை செய்யப்படும்.
   இயல்பான சேவையின் சிறப்பை அனைவரும் அறியச் செய்பவர்கள் சமூக சேவர்கள் ஆவர். அவர்கள் சமூக சேவகர்களாகவோ பகுதி நேரச் சேவகர்களாகவோ மறைமுகச் சேவகர்களாகவோ (...யின் பொருள்களை வாங்குவதன் மூலம்) உருமாற்றம் செய்வதால் ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ள மனிதநேயம் வளர்ந்து வெளிப்பட்டுச் சிறந்த சமூகச் சேவகர்களாகச் செயல்படும்போது, சமுதாயத்தில் சிறந்து நிறைவான மனநிறைவுடன் இந்தச் சமூக சேவகர்கள் வாழ்வார்கள்.
``அவன் இயல்பில் அடங்கி அமரனாகிறான்’’.
... = இயல்பு











No comments:

Post a Comment