aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

19. தளர்வு நிலையில் இயல்புணர்வு



19. தளர்வு நிலையில் இயல்புணர்வு

    தளர்வு நிலை என்பது ஓய்வெடுத்துக் கொள்ளுதல் என்று பொருள். ஒரு மனிதன் தனது சுயநினைவுடன் தனது மனத்தையும் உடலையும் அமைதியுறச் செய்து கொள்ளுதலையே தளர்ச்சி பெறுதல் என்று கூறுகிறோம். உடல் இறுக்கத்தை தளர்த்தும் பல யோக முறைகளும், மனதை இசையால் தளர்த்தும் பாரம்பரிய முறைகளும் இருக்கின்றன. இயற்கை நாத ஆனந்தம் - இறைவனின் ஒலி, இந்த இயற்கை ஒலியே இறைவன். பிரபஞ்ச ஒலி என்பது ஒரு உயிரோட்டம் உள்ள ஒலி. இது தருகின்ற நிவாரணம் சிறந்த தளர்வு முறைகளில் ஒன்று.
     இயற்கை ஒலியால் தளர்வு நிலை செய்யும் பயிற்சி ஒரு சிறந்த புதிய கலையாகும். இந்த பயிற்சி ஆக்கப்பூர்வமான ஆற்றலை உருவாக்கி ஆழ்ந்த தளர்வு நிலைக்கு வழிவகை செய்கிறது. இதனால் உள்மன ஆற்றலை அறிந்து விழிப்படையச் செய்கிறது. இந்த பயிற்சியில் இயற்கை நாதஒலி வலிமைமிக்க உடற்பகுதிகளிலும் உள்மனதிலும் ஒலி மற்றும் அதிர்வலை ஆகியவற்றிக்கிடையே ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுவதால் உள்ளே சீரான ஒலியலைகள் உற்பத்தியாகின்றன. இந்த ஒலியலைகள் இயல்புணர்வை இயக்கி, உருமாறி சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
     இயற்கை ஒலி, உள்மன ஒலியாக மாறி இனிய மனநிலையை உருவாக்குகிறது. இயற்கை தளர்வு நிலையில் தத் என்ற ஒலி அதிர்வின் மூலம் பிரபஞ்சத்தில் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை நினைவுபடுத்துகிறது. உடலில் மூலாதார ஆற்றல் மையம் என்பது உடலின் ஒலியின் துவக்கப் பகுதியை ஒலியின் அதிர்வால் விழிக்கச் செய்து வலுப்படுத்தப்படுகிறது.
      மேலும் இயற்கையான நுட்பமான முறையில் ஒலியின் அதிர்வால் உள்ளுணர்வு மையங்களையும் ஒவ்வொரு ஒலி அதிர்வுகளால் விழிக்கச் செய்து வலுப்படுத்தப்படுகிறது. இந்த முறையில் கற்பகமாக உள்ள தெய்வீக ஆற்றலை நுட்பமான முறையில் இயற்கை ஒலி அதிர்வால் பின்னிப்பிணைக்கச் செய்வதால், உடலில் உள்ளே உள்ள உள்ளுணர்வு மையங்களை நிதானத்தில் நிலைக்கச் செய்கிறது. இதை இயற்கையான குணமளிக்கும் ஒலியாலும், பழமையான நுட்பமான ஒலி அதிர்வுகளால் ஆற்றல் அதிகரிக்கப்பட்டு தூண்டப்படுகிறது. இது மேலும் ஊக்கப்படுத்தப் பட்டு உடலும் மனமும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியான உணர்வுடன் அமைதியுறச் செய்து உள்முக பயணத்திற்கு ஆட்படுத்துகிறது. இந்த நிலையில் தலையின் உச்சியில் தெய்வீக ஒலியை ஈர்க்க முயலுகின்றது. இந்த தெய்வீக ஒலியலைகளால் ஆராதனை செய்யப்படுவதால் தலையின் உச்சியில் பொன்முட்டை வடிவில் இருக்கும் பிந்துவின் மையத்தில் இந்த ஒலி அதிர்வுகள் நிலை நிறுத்தப்படுகின்றன. இந்த நிலையில் மனம் லயித்து வலுப்படுத்தப்படுகிறது. இதனால் இயல்புணர்வும், இயற்கை ஒலி அதிர்வுகளும் இரண்டறக் கலந்து ஆத்மாவை விழிப்புக்கு மெய்யுணர்வு அறியச் செய்கிறது.
      இந்த இயற்கை நாத இசையின் மெய் ஒலிகளை மூளையின் மூலம் கேட்டு இன்புறுவதற்கு முயலாதீர்கள். மாறாக அமைதியான இடத்தில் வசதியான முறையில் இந்த ஒலிகளை உங்கள் இதயவெளியில் உல்லாசமாக பறந்து செல்லட்டும்.
       இதனால் உடலில் உள்ளே ஒவ்வொரு இடத்திற்கும் புத்துணர்வை தோற்றுவிக்கிறது. இதனால் உள்ளத்தில் ஆழமாகப் பற்றியுள்ள இறுக்கமான மனநிலை தளர்வுறுகின்றது. முரண்பாடுகள் களையப்படுகின்றன. உள்ளுணர்வின் விழிப்பு விரைந்து செயல் படுகின்றது. இயற்கை பெருங்கருணை எனும் அமுத எழுத்து ஒலிகள் உங்கள் உள்ளமெங்கும் பெருகி ஓட பழகுங்கள். இயற்கை இன்னிசையின் ஒலியலைகள் உங்கள் உள்ளமெங்கும் பெருகி ஓட பழகுங்கள். பிரபஞ்ச நாத இன்னிசையின் ஒலியலைகள் உங்கள் இதயகமலத்தில் ஒலிக்க செய்வதன் மூலம் நீங்கள் இயல்புணர்வு சக்தியால் புதுப்பிக்கப்பட்டு நல்வழிப்பாதையில் செல்ல உதவுகின்றது.
     இந்த இயற்கை நாத ஒலி அதிர்வுகள் இயல்புணர்வை ஆழமாக மனதில் சென்று மூளையில் மறைந்து கொண்டிருக்கும் நேர்முக இயல்புகளை ஊக்குவிப்பதால் நேர்முக ஆற்றல் அதிகரித்து நம்மிடம் உள்ள தேவையற்ற அச்சம், பயம், குழப்பங்கள் குறைகின்றன. இதனால் நிறைவான உறக்கம், குணப்படுத்துவதற்கு கூடுதலான எதிர்ப்பு சக்தியை கிடைக்கச் செய்து உடலின் சீரான இயக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் இயல்புணர்வால் புற மற்றும் அக இயல்பை அறிய செய்து உடலும், மனமும் சமநிலை அடைந்து, முழுமையான தளர்வு நிலை அக தெய்வத்தை விழிப்புறச் செய்கிறது. இந்த இயற்கை நாத ஒலிகளை தினமும் காலை, மாலை 6.30 மணிக்கு தொடங்கி 6.51 வரை கேட்டு இன்புறுதல் மூலம் உடலும் மனமும் ஒன்றிணைந்து சூழ்ந்த தளர்வுறுதல் மூலம் நம்மிடமுள்ள சக்திகள் புதுப்பிக்கப்பட்டு ஆற்றல் கிடைக்கிறது. இதனால் நிறைவாக செயல்பட்டு வாழ்க்கையை முழுமையடையச் செய்கிறது.
      இந்த முடிவில்லா இயற்கை நாத ஓசையில் இணைந்து உள்ளானந்தம் அடைவோம். இந்த குறுந்தகடு ...யின் வெளியீடாகும். இதன் விலை ரூ.199/- ஆகும்.



No comments:

Post a Comment