aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

14. எ.எ.எ. மந்திரங்கள்

   








14. ... மந்திரங்கள்
     ``... மந்திரங்களை ஒவ்வொரு செயலிலும் மனதில் கொண்டு ஈடுபடுவதின் மூலம் உயரிய சமுதாயத்திற்கு வித்தாகின்றது’’.
... தாரக மந்திரத்துக்கு வித்திட்ட மூல மந்திரம் `உன்னை உயர்த்திக் கொள்என்பது ஆகும்.
மனித வளத்தையும், ஏனைய வளங்களையும் சீரிய முறையில் பயன்படுத்தி மேன்மையுறச் செய்யும்போது உயரீய சமுதாயம் உருவாகின்றது. இதற்குச் சமுதாயத்தில் உள்ள மனிதர்களிடம் ஒளிமயமான அற்புதமான சிந்தனை மாற்றங்களை உண்டாக்குவதற்கான அறிவுத் திறனைப் பெறுவதற்குப் பயிற்சி பெறுவோரின் பொறுப்புகளையும், கடமைகளையும், திட்டவட்ட மாக வரையறுத்து நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும் ஆற்றலை உணர்கின்ற வகையில் அவர்களுக்குத் தியானம், பிரார்த்தனை, ஆத்ம பிரார்த்தனை முதலியவற்றில் எளிமையான நடைமுறைப் பயிற்சி அளிக்க வழிவகை செய்யவேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் வேலைகளில் நிறைவடைந்து செயல்புரிய அவர்களுக்கு எளிமையான சேவை முறையை அறியச் செய்ய வேண்டும். அவர்களை மேலும் திறமையாக உழைக்கச் செய்தல், தரமான பொருள்களை உற்பத்தி செய்தல், அனைவருக்கும் தரமான பொருள்களை கிடைக்க வழி செய்தல் மூலம் அனைவரும் பயன் அடைந்து ஒட்டுமொத்த சமுதாயமும் சிறப்பாக வளர்ச்சி அடையச் செய்யமுடியும். இந்தக் குறிக்கோளை அடைய ...யின் மந்திரங்கள் வழி நடத்திச் செல்லுகின்றன. அவை 1. ஏற்ற தரம், 2. மேலும் மேலும் முன்னேற்றம், 3. தொடாச்சியான மேம்பாடு ஆகியவையாகும். இந்த மந்திரத்தை ஒவ்வொருவரும் மனத்தில் கொண்டு ஒவ்வொரு செயலில் ஈடுபடுவதின் மூலம் ஒவ்வொருவரின் குறிக்கோளையும் அடைய முடியும். நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வள ஆதாரங்களையும் இந்த மந்திரங்களைக் கொண்டு வளப்படுத்துவதன் மூலம் உயரிய சமூகம் அமையும்.
இந்த மந்திரம் எல்லாத் துறைகளுக்கும், எல்லா நிகழ்வுகளுக்கும், எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். இவை சமுதாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி ஆகியவற்றிற்கு உதவுவதுடன் அதன் சிறப்புத் தன்மை, அதன் முன்னேற்றம், அதன் தொடாச்சியான மேம்பாடு ஆகியவற்றைக் காணச் செய்கிறது. சமுதாயமாக இருந்தாலும் வணிகமாக இருந்தாலும் இல்லறமாக இருந்தாலும் மேற்கூறிய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஒவ்வொருவருடைய முழுத் திறமையையும், முழு ஈடுபாட்டையும் அடைய ... வலியுறுத்துகின்றது. சுருங்கக்கூறின் நாள்தோறும் தத்தம் வேலைகளில் அவ்வேலையைச் செய்பவர் செய்யக்கூடிய சிறு சிறு முன்னேற்றங்கள் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் நிறைவான வளர்ச்சிக்கு இது அடிப்படைக் கருத்தாக அமைகின்றது.
உலக அளவில் நமது சமுதாயம் விரிவடையும்போது பொது அளவுக்கூறான பொருளாதாரம் நல்ல சமுதாய வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படைத் தத்துவமாக அமைகிறது. இந்தப் பொருளாதாரம் ஆய்வின் அடிப்படையில் தோன்றியதுதான். ... கூட்டுச் சமூக வணிகமாகும். அன்றைய நாள் முதல் இன்றைய நாள் வரை சேவையின் சிறப்பை அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது பழமொழி. ஆனால் இந்தச் சேவையின் சிறப்பை உணர்ந்து அறிய நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பயணத்தை ... கூட்டுச் சமூக வர்த்தகம் எளிமையாக்குகின்றது. இதை மேலும் முழுமையாகவும் சிறப்பாகவும் வழி நடத்த ... மந்திரங்கள் உதவுகின்றன. இந்த மந்திரங்களை ஒவ்வொருவரும் கடைப்பிடித்துச் சிறப்பாகச் செயல்படுவதன் மூலம் சேவையின் சிறப்பை அனைவரும் அறியச் செய்கின்றது. வளமான சமுதாயம் அமைய இது ஓர் ஆரம்பமே தவிர முடிவல்ல. இப்பணிக்கு எங்களுடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டுகின்றோம். மேற்கூறிய தாரக மந்திரங்கள் இன்றைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத அம்சங்களாகும்.
புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்
``அவன் அவனையே அறிய வேண்டும்’’
... = இயல்பு



14. I ஏற்ற தரம்
``ஏற்ற தரம் எல்லா செயல்கள் செய்வதால் தரமான சமுதாயம் அமையும்’’.
   தரம் என்பது வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இது சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றது. இந்தத்தரம் மேம்பாடான உணர்வை ஏற்படுத்தி மனநிறைவு அளிக்கின்றது. தரத்தால் எல்லாருடைய செயல் திறனையும் அதிகரிக்க முடிகிறது.
   தரமான வாழ்க்கை, தரமான சமுதாயம், தரமான வர்த்தகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தரத்தை மேம்படுத்தும் புதிய முயற்சியே ... தரமாகும். ...யின் அனைத்து நெறிகளும் தரத்தை சார்ந்தவையாகவே இருக்கும். இதில் தரக்கட்டுப்பாடு நடைமுறைகளில் தரத்தைப் பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளவில்லை. இது ...யின் யுத்திகளைத் தரக்கட்டுப் பாடுடன் இணைத்து அதை ஒரு முக்கிய நிர்வாகக் கருவியாக மாற்றுகின்றது. இதனால் ஒவ்வொரு நாளும் தரத்தை அதிகரிப்பதே இதன் தலையான செயலாக இருக்கும். சமுதாய வளர்ச்சியோடு தரம் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும். இதன் வணிக பொருள்கள், செயல் முறைகள், பணியாளர்கள் இதனைச் சேவையாகவே செய்வதால் அது முழுமையான ஏற்றத்தரமாக மாறுகின்றது.
   இந்த வர்த்தகம் வாடிக்கையாளரின் திருப்தியினை இலக்காகக் கொண்டு செயல்படும். இது தரத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றது. இது வர்த்தகத்தின் தரத்தில் பிணைந்துள்ள பிழைகளைத் தவிர்த்துச் செயல்படக் கூடிய சிறந்த தர அமைப்பு முறையினைக் கொண்டு நிர்வகிக்கப்படும் ஒரு கூட்டு நிர்வாக முறையே இந்த ...யின் வணிகமாகும்.
   எ...யின் சிறந்த வரையறுக்கப்பட்ட அமைப்பின் மூலம் இதன் கட்டமைப்புகளின் முழுமையான தரத்தால் சமுதாயத்தைச் சிறக்கச் செய்யலாம். ...யின் சமூக வர்த்தகத்தில் முதல் மந்திரம் ஏற்ற தரத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையினைச் செய்வதே ஆகும். இது ஏற்றத்தரத்தைக் காலத்திற்கு ஏற்றாறபோல் வரையறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்குத் தர வட்டங்கள், தரக்கட்டுப்பாடுகள் இன்னும் அரிய தொழில் நுட்பங்கள் முதலியவற்றை அமைத்துக் கொண்டே இருக்கும். இதன் வர்த்தகத்தில் தரத்திற்கு எல்லையே இல்லை. அது வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கி விரிவடைகின்றது. இந்த வணிகப் பொருள்களின் ஏற்றத்தரத்தை மேம்படுத்தத் தேவையான எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டே இருக்கும். தரத்தைப் பற்றிய கலந்தாய்வுகளும், வழிமுறைகளும், வகுப்புகள் போன்ற அனைத்து வழிமுறைகளையும் ஆராய்ந்து ஏற்றத்தரத்தை உயர்த்த வழிவகை செய்கின்றது.
    ஏற்றத்தரத்தைக் காப்பதன் மூலம் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பைத் திருப்தி அளித்துச் சமுதாயத்துடன் ஒன்றியதாக ... மாற்றுகின்றது. முழுமையான தரக்கட்டுப்பாடு என்பது ... வர்த்தகத்தில் சேவையில் ஏற்பட்டதொரு சிந்தனைப் புரட்சியாகும். இதில் எல்லோரும் பங்கு கொள்வதால் விளைவது தரமேயாகும். சேவையின் சிறப்பைப் பணியாளர்கள் அனுபவித்து உணர்வதன் மூலம் வர்த்தகத்தின் தரம் மேலும் மேலும் அதிகரிக்கின்றது. ஏற்றத்தரத்தைக் காக்கும் வழியே சேவை செய்யும் வழி.
தரமான நெறியுடன் சமுதாயம் உருவாக்குவோம்.
``அதை அறிவதே அறிவு’’
                ... = இயல்பு



14.II  மேலும் மேலும் முன்னேற்றம்
``அனைத்து செயல்களிலும் முன்னேற்றம் செய்வதால் சிறந்த சமுதாயம் அமைவது’’
  முன்னேற்றங்கள் சமுதாயத்தை நோக்கி எடுக்கப்படும் உண்மையான முயற்சிகளின் விளைவாகும். இந்த முன்னேற்றத்தால் வாழ்க்கையின் வசதிகள் அதிகமாகினற்ன; வேலைகள் எளிதாகின்றன; மக்களுக்குப் போதிய பாதுகாப்புக் கிடைக்கின்றது; நுகர்வோரை மகிழ்விக்கின்றது; மொத்தத்தில் இது சிறந்த சமுதாயமாக மாற்றுகின்றது. இந்த முன்னேற்றம் எல்லாத் துறைகளிலும் ஏற்பட வேண்டியது அவசியமாகிறது.
   இந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே போதாது. தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால் இந்த முன்னேற்றத்தை மேலும் முன்னேற்றமடையப் பாடுபட வேண்டும். அது மேலும் சிறக்க மேலும் மேலும் முன்னேற்றத்தால் மட்டுமே தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
   தற்போதைய முன்னேற்றத்தில் திருப்தி அடையாமல் அதில் சிறந்து விளங்க மேலும் மேலும் முன்னேற்றம் தேவைப்படுகின்றது. சமுதாயம், வணிகம், இல்லறம் போன்ற அனைத்துத் துறைகளிலும் நாம் மேலும் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த முன்னேற்றம் நிறைவான வாழ்க்கைக்கு உகந்ததாக அமைய வேண்டியது முக்கியமாகும். இந்த  முன்னேற்றம் என்பது ...யின் இரண்டாவது தாரக மந்திரமாகும். இந்த மந்திரத்தைச் சேவைக்கு அடிப்படையாகக் கொண்டு செய்வதால் ஒரு நிறைவான சமுதாயம் உண்டாகும்.
    இந்த வர்த்தகம், சேவையை மையமாக வைத்து நடத்தப்படுகின்றது. இந்த வர்த்தகம் முன்னேற்றத்தால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நிறைவுறும் வகையில் உருவாக்க வேண்டியுள்ளது. வாடிக்கை யாளர்களுக்கு மனநிறைவு ஏற்படுத்தும் வகையில் வர்த்தகம் நடத்தப்பட வேண்டும். சேவையாகவே கருதி வர்த்தகம் நடத்தப்பட வேண்டும். இதற்கு இரண்டாவது மந்திரமான முன்னேற்றத்தை ... வர்த்தகத்தில் உள்ளவர்கள் அனைவரும் மனத்தில் கொண்டு முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தற்போதைய நிலையின் முன்னேற்றத்தில் திருப்தியடையாமல், இந்த வர்த்தகத்திலுள்ள அனைவரும் அவரவர் செய்யும் பணியில் ஒரு சிறிதளவேனும் புதுமையான முன்னேற்றம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். வர்த்தகத்தில் தேவையற்றதைக் கட்டுப்படுத்த வேண்டும். பிறருக்கு வணிகத்தால் சேவை செய்வதால் அடையும் நிறைவைப் பற்றி நினைத்துப் பெருமைப்பட வேண்டும். உங்கள் வர்த்தகப் பொருளும் வர்த்தக முன்னேற்றமும், தொடர்ந்த சேவையும், உங்கள் வணிக வட்டங்களைப் பொறுத்தமட்டில் தலைசிறந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் திருப்தியே நமது ஊதியம். அவர்களுக்கு ஆற்றும் சேவையே நமது வர்த்தகத்தின் லட்சியம். செயல்முறைகளில் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் புகுத்தி எல்லோரும் பங்கு பெறுமாறு சரியான சமநிலை அமைப்பை உருவாக்குவோம்.
    இந்த முன்னேற்றத்தை ... வர்த்தகத்தில் நடைமுறைப்படுத்தும்போது சிறந்த சேவையின் மூலம் இதன் முன்னேற்றம் நிறைவான வாழ்க்கைக்கு ஏற்றதாக மாறுகின்றது.
வலிமையான சமுதாயமாக உருவாக்குவோம்.
``அதை அடைந்தவன் எல்லா முன்னேற்றங்களையும் அடைகின்றான்’’.
... = இயல்பு




14.III  தொடர்ச்சியான மேம்பாடு
  ``சமுதாயத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதால் உயரிய சமுதாயம் அமையும்’’.
   இன்றைய வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இதை மேலும் மேலும் சிறக்க மேம்பாடு அவசியமாகின்றது. ஒருமுறை மேம்பாடு அடைந்தால் போதாது. அது தொடர்ச்சியான மேம்பாடாக அமைய வேண்டும். இதுவே ...யின் மூன்றாவது மந்திரம்.
   முழுமையான சமுதாய மறுமலர்ச்சி என்பது எல்லாத் துறைகளிலும் தொடர்ச்சியான மேம்பாட்டை அடையச் செய்வதுதான். இந்தத் தொடர்ச்சியான மேம்பாடு பயனுள்ள வகையில் செயல்படுவதுதான் இன்றைய வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஒன்றாக உள்ளது. சமுதாயத்தில் வாழும்போது தனக்குரிய பங்கு இன்னதென்றும் அதன் குறிக்கோள் இன்னதென்றும் அறிந்து செயல்படுதல் சிறப்பு. சமூக மேம்பாடு என்ற இலக்கைப் புரிந்துகொண்டு அதை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நடைமுறையில் எவ்வளவு சிறப்பாக ஏற்றுச் செயல்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தது ஆகும். இந்தத் தொடாச்சியான மேம்பாடு துறையில் நிறையக் கருத்தாய்வுகளும், மாநாடுகளும், செயல்பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டாலும் அவை முழுப் பயனையும் தரா. ஒவ்வொருவரும் தன் மனத்தில் இந்த மந்திரத்தைப் பதிய வைத்துச் செயல்படும்போது தரமான சமுதாயமாக மலர்கின்றது. இது மாதிரி எல்லாத் துறைகளிலும் தொடாச்சியான மேம்பாடு அமைய ... என்றென்றும் முயலும்.
    எ... வர்த்தகத்தில் தொடாச்சியான மேம்பாடு என்பது தரமான பொருள்களை அளித்தல், குறித்த காலத்தில் பொருளை அளித்தல், விற்பனைக்குப் பின்னும் தொடர்ந்த சேவை, வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், இது மாதிரி வாடிக்கையாளர் இடையே முழுமையான திருப்தியைத் தோற்று விக்கும். இந்த மேம்பாடு தொடர்ந்து இருந்தால் சீரிய வணிகமாக மாறும். நாட்டில் உள்ள அனைத்து வள ஆதாரங்களையும் தொடர்ச்சியான மேம்பாடு மூலம் உயரிய சமுகமாக மாற்றுவோம்.
உயரிய சமூகம் உருவாக்குவோம்.
                ``அதுவே அனைத்தும் அறிவது’’
                ... = இயல்பு


No comments:

Post a Comment