aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

12. எ.எ.எ. இலட்சியம்


12. ... இலட்சியம்
       ``ஒவ்வொரு மனிதர்களிடமும் உள்ள இயல்பு நிலையை அறியச் செய்வதுதான் ... இலட்சியம்.
   எ...யின் வாழ்க்கை நோக்கம் பற்றிப் பயிற்சி என்னென்ன மதிப்பீடுகள் உங்களுக்கு முக்கியமானவை என்பதை அடையாளம் கண்டுகொள்ள உங்களைத் தூண்டும். உங்களுடைய முக்கியமான வாழ்க்கை நோக்கத்தைச் சுற்றியுள்ள தளத்தில் புரிதலுக்குரிய ``... இலட்சியம்’’ நீங்கள் அமைக்கத் தொடங்கலாம். இப்படித் தொடர்ச்சியான முறையில் நீங்கள் இதைச் செய்யும் போது உங்களுடைய இலட்சியமும் மதிப்பீடுகளும் ஒன்றாகக் கலந்து இயல்பாகவே ஒன்றை ஒன்று சார்ந்து உதவிக் கொள்ளும். உங்களுடைய ஆழமான உறுதிப்பாடுகளின் வாயிலாக அவற்றுக்கிடையில், இரண்டறக் கலந்த நிலைமை உருவாகும்.
   தருமம் காட்டும் வழியிலே செய்யத்தக்க மனத்திடத்தை அமைத்து, சமுதாய விழிப்புணர்ச்சியை ஊக்கம் பெறச் செய்து எல்லோருக்கும் நம்பிக்கைமிக்க நலமான சமுதாய ஆன்மீக அணுகுமுறையையும் புதிய சிந்தனையையும் வளர்த்து மக்கள் அனைவரையும் ஆன்மீகச் சமுதாயத்திற்குக் கொண்டுவந்து நம்முள்ளே உறைகின்ற இயல்பான சக்தியை வெளிப்படுத்திச் சமுதாயத் திற்குச் சேவை செய்து வர்த்தகத்தால் பொருளாதாரத்தை அதிகரித்து உலகில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதே ...யின் இலட்சியம்.
  எ... போதனைகளின் அடிப்படையிலும் குறிப்பாக அன்பான பரிவுடன் கூடிய ஆத்ம பிராத்தனையின் உள்முகப் பார்வையாகக் கொண்ட ... மக்களின் விழிப்புணர்வினை வலியுறுத்தும். இது ஆன்மீகப் பயிற்சி, விழிப்புணர்வு, அறிவு, பரிவுணர்ச்சி, செயலின் நேர்மை ஆகியவற்றின் மொத்த உருவம். இதன் அனைத்துச் செயல்களும் சமூகத்தின் ஒட்டு மொத்த நன்மைகளுக்காகச் செயல்படும்.
   தனிமனிதன் : ஒரு தனிமனிதனின் தன்னலமற்ற செயல்கள் மூலமாகவும், தூய்மையான பக்திக்குத் தொடர்புடைய செயல் களாலும் உலகம் அனைத்து நன்மைகளும் பெறுகின்றது. ... யின் உள்முக நோக்கத்தினையும் பரிவுணர்வினையும் புத்துயிர் பெற்று நம்மை நாமே குணப்படுத்திக்கொள்ள வல்லது. நமது வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்திட உதவுகின்றது.
   குடும்பம் மற்றும் சமுதாயம் : நம் ஒவ்வொருவரையும் ஒன்றாக இணைத்து அங்கீகரித்து, ... ஒரு கருவியாகச் சமுதாய நடவடிக்கைகளை வளர்ச்சியுற உதவுகிறது.
     இதன் நோக்கம் என்னவெனில் நமது குடும்பங்களில் உறவு முறைகளைப் பரிவோடு ஐக்கியப்படுத்த வேண்டும். நெருங்கிய நட்பும், உறவும் மேம்பட வேண்டும் என்பதே. இந்த ... சமுதாயக் கூடத்திற்கான மையமாக இருக்கும். வழிகாட்டுதல் அளிப்பது, சமுதாய மக்களின் பிறப்பு, இளமைப் பருவம், திருமணம், உடற்பிணி ஆகிய அனைத்திற்கும் ஆலோசனை அளிப்பது ...யின் செயல்பாடாகும்.
   இந்த ... உண்மையில் சமுதாயத்தின் உறுப்பினர்களுக்கு இடையே பெற்றோர், குடும்பம், வாழ்க்கையை அச்சுறுத்தும் நோய்கள், குழந்தை வளர்ப்பு, பல்வேறு வகையான குடும்ப வளர்ச்சி நிலை, குழந்தைகள், கல்வித் திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
   பணி, தொண்டு மற்றும் சமுதாயச் செயல்கள் : உயரிய பண்பாட்டுக்குத் தலை வணங்கிச் சமுதாயம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு விழிப்புணர்வினை உண்டாக்குதல், ... என்ற பெயரில் கூட்டு சேர்ந்த தொழிலில், தொழில் நடவடிக்கைகளையும், மிகத் திறமையாகவும் மிக நுணுக்கமாகவும் தரமான பொருள்களைத் தயாரிக்கும். ... தொழிலில் உங்களது உதவி, அனுபவங்கள் ஆகியவைப் பகிர்ந்து கொள்ளப்படும். நமது நோக்கம் இதன்மூலம் மக்களுக்குச் சேவை புரிவது, உணவு அளிப்பது, மருந்து அளிப்பது, கல்வி கற்பிப்பது, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது போன்றவற்றிற்காக இருக்கும்.
   எ... நிறுவனம் மனித வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவுவதற்கு இயலும் என்பதை ஆராயும். சமுதாய நீதி, சுற்றுச்சூழல், சீரழிவு, பொறாமை, வெறுப்புணர்ச்சி, அறியாமை ஆகியவற்றை நீக்கி வளம் பெறப் பாடுபடும்.
   செயல்கள் : அன்றாடம் ... காலை, மாலை வேளைகளில் ஆத்ம பிரார்த்தனையை மேற்கொள்ளும். நிகழ்த்த வேண்டிய வகுப்புகள், தொழில் ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னின்று மேற்கொள்ளும்.
   மேலும் இந்த ... கொள்கை அளவில் தீர்மானங்களை நிறைவேற்றி அதிகார வரம்பினை வகுத்து மேன்மையுறச் செயல்படும். ... மனித சமுதாயத்திற்காக என்றென்றும் பாடுபடும். ... குழுக்களின் முதன்மைப் பொறுப்பில் உள்ளவர் இளைஞனாக இருப்பார். குழுக்கள் ஒழுங்கு முறைகள் நிறுவன அமைப்பு எல்லா மக்களுக்கும் சென்றடைய முறைப்படுத்தப்படும்.
   எல்லோருக்கும் எளிமையான மருத்துவம் அளிப்பதற்குக் காலத்திற்கு ஏற்ற ஆயுர்வேத முறையில் பல ஆய்வுகளை நடத்தி ... என்ற பெயரில் தரமான மருந்துகளை உற்பத்தி செய்து இது எங்கும் கிடைக்க வகை செய்யும். ...யில் உள்ளவர்கள் மருந்துகளைக் கையாள்வதில் திறமை பெற்றவர்களாகவும் மக்கள் நலனில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
   எ...யில் சேர வாருங்கள்! இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் வாழ்நாளில் நல்ல எண்ணம், நல்ல செயல் ஆகியவற்றை அனைவரும் பெறலாம்!
``தன் இலக்கை ம்பு ஒன்றுவது போல தனுடன் தன்மயமாகும்’’.
                ...  =  இயல்பு

No comments:

Post a Comment