aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

21. கர்மயோக நிலையில் இயல்பான சேவை



21. கர்மயோக நிலையில் இயல்பான சேவை
      ``இந்த பிறவியில் கர்மயோக நிலையில் இயல்பான சேவையில் ஒவ்வொரு நற்செயலும் பேரின்ப பெருவாழ்வுக்கு வித்தாகிறது’’.
     செய்யும் செயலை சிறப்பாக செய்வதே கர்மயோகம். தன்னை அறிந்து செய்யும் செயலை சிறப்பாகச் செய்வதே கர்மயோக சேவையாகும். இந்தக் கர்மயோக நிலையில் இயல்பான சேவைப் பாதையைப் பின்பற்றும் பொழுது இதயத்திற்கு உண்மையாக இருங்கள் அப்போது பேர் உண்மை விளங்கும்.
   மனிதன் தன் அனைத்துச் செயல்களையும் தன் உணர்வுகளை மகிழ்விக்கவே செய்கிறான். நானே இதைச் செய்கிறேன்; இவை எனக்குச் சொந்தம்; இந்த எண்ணங்களை மாற்றுங்கள். இவை அனைத்திற்கும் பரம்பொருளே காரணகர்த்தா. அவர் சக்தியாலேயே நடைபெறுகின்றது. நான் வெறும் கருவி மட்டுமே என்று நீங்கள் உங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதே கர்மயோகம். இந்தக் கர்மயோகத்தின் ரகசியம் ஒவ்வொரு செயலையும் ஆர்வத்தோடும், தன்னலமற்றும் இயல்பான சேவை செய்வதுதான். இந்தக் கர்மயோகத்தில் நாம் செய்யும் வேலையை நிறைவாக ஆற்றி இயல்பான சேவை செய்து வாழ்வதே சிறந்த கலையாகும்.
நாம் அனைவரும் ஏதேனும் ஒரு கர்மயோக நிலையில், அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இந்த நிலையில் இயல்பான சேவையில் இணைந்து செயல்படும் போது அகங்காரம் சிறிது சிறிதாக நீங்குகிறது. செயல்கள் அனைத்தும் நிறைவானவையாக அமைகின்றன. இதன் இனிமையைச் சுவைத்த பின்னர் இவ்வுலகமே தெய்வீகத் தன்மையின் ஒரு வெளிப்பாடுதான் என்பதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். தான் பரம்பொருளை ஒன்றியவன். அவன் லீலையில் பங்கெடுப்பவனே என்று எண்ணுகிறார். அவன் அவனுக்காகவே அவனுள்ளேயே வாழ்கிறான். இப்போது அவனது எண்ணங்களும் செயல்களும் இறைவனுடையவையே.
    கர்மத்தை ஒரு யோகமாகச் செய்யும்போது அது இன்பத்திற்கான காரணமாக அமைகிறது. கர்மலோக நிலையில் சேவை செய்யும்போது அது பேரின்பத்திற்கு காரணமாக அமைகிறது. கர்மயோக நிலையில் இயல்பான சேவையை தன்னலமற்ற செயல்களால் செய்யும் போது பூரண அமைதி கிடைக்கிறது.
    பல வருடங்களாக இடர்ப்பாடுகளுக்கிடையில் கடுமையாக உழைத்து இயல்பான சேவையுடன் வாழ்ந்த ஓர் உண்மையான கர்மயோகியை நீங்கள் கண்டால் அவரின் தூய்மை, தன்னலமற்ற நிலை, உள்ளானந்தம், சாதாரண அமைதி மற்றும் ஆன்மீக வாழ்வில் அவரடைந்துள்ள முன்னேற்றத்தை நன்கு உணரமுடியும். நீங்கள் உங்கள் உடலாலும் மனதாலும் கூட கர்மயோகத்தை செய்யலாம். இதனுடன் தினமும் இயல்பான சேவை செய்யுங்கள். இதை உங்கள் வாழ்வின் இறுதிவரை செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக இருக்கமுடியும்.
     இயல்பான சேவையில் சீரான பயிற்சியால் நீங்கள்சிறந்த கர்மயோகியாக மாறுவீர்கள். இதனால் தன்னலமற்ற இயல்பான சேவையைச் செய்து எல்லா செயல்களும் உச்ச வளர்ச்சியடைந்து ஞானத்தில் இணையும். இந்த கர்மயோகத்தில் இயல்பான சேவை செய்யும் வாய்ப்பையும் நழுவவிடாதீர்கள். சிறந்த சேவைக்கான தளத்தில் இணைந்து செயல்படுங்கள். செயல்களைத் தள்ளிப்போடாதீர்கள். உற்சாகத்தோடும், மனமுவந்தும் சேவை செய்யுங்கள். உண்மையான அன்போடும், மரியாதையோடும், இரக்கத்துடனும் இயல்பான சேவை செய்யுங்கள். சேவை செய்யும் வாய்ப்பைத் தந்ததற்காக நீங்கள் நன்றியோடு இருங்கள். இதனால் தெய்வீக ஆற்றல் தானே வரும். பிறருக்காக எவ்வளவு செலவிடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக அந்த தெய்வீக சக்தி உங்களுள் பாயும்.
       கர்மயோக நிலை சேவை என்பது தவறானவற்றை எதிர்க்கவும், நல்லவற்றை மேம்பாடு அடையச் செய்யவும், நற்குணங்களை வளர்க்கவும், பழைய கர்ம விளைவுகளில் இருந்து விடுபடுவதற்கும் புதிய நற்செயல்களைச் செய்ய வழிவகை செய்கிறது. ஒருவர் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்ளவும், தேவையற்ற பதிவுகளையும், ஆசைகளையும் அகற்றச் செய்கிறது. அதனைப் பழகியவர்களுக்கு அது எளிதாகவும், இனிமையாகவும் ஆகிவிடும். முடிந்தவரை எதையும் எதிர்பாராமல் பணி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் மனத்தை விரிவுபடுத்திக் கொண்டு இவ்வுலகமே நீங்கள் தான் என்று எண்ண வேண்டும். இதனால் ஆழ்ந்த உள்வலிமை தோன்றும். உங்கள் மனத்தில் உண்மையான அன்பு, பரிவு, இரக்கம் ஆகியவை நிரம்பித் ததும்பும். இதனைத் தன்னலமற்ற செயல்களாகச் செய்வீர்களானால் அந்தளவுக்குத் தெய்வீக ஆனந்தம் உங்களுள் பாயும். எவன் தன் சுகத்தையும், சந்தோஷத்தையும் பிறருக்கு உதவுவதற்காகச் செய்கின்றானோ அவனே சிறந்த ஆத்ம சாதகனாக மாறுகின்றான். இறுதியான பேரின்பத்தை அடைய வேண்டுமானால் நீங்கள் கர்மயோகியாக மாறி இயல்பான சேவை செய்ய வேண்டும். கர்மயோக நிலையில் செய்யும் இயல்பான சேவையில் செய்யும் செயல்கள் புனிதமானவையாக மாறி ஆனந்தத்தை கொடுக்கும். உலகத்தில் இருந்துகொண்டே உலக வாழ்க்கை மூலமாக முக்தியடைய வழி கூறுகிறது.
       ``கர்மயோக நிலையில் இயல்பான சேவையின் மூலம் அனுபவம் பெறும் போதுதான் பிறப்புக்கள் அறுக்கப்பட்டு இலக்கை விரைந்து அடையச் செய்கிறது’’.







No comments:

Post a Comment