aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

16.இயல்புணர்வு முன்னுரை



16.இயல்புணர்வு முன்னுரை


மனிதன் பரிபூரணம் நிறைந்தவன். நமது இயல்பு தூய்மையானது. இயல்புணர்வை விழிப்படைய செய்வதுதான் நம் கடமை. நமது இயல்பு தானாகவே வெளிப்படும்; தன்னிச்சையாகச் செயல் படுத்திக்கொள்ளும். அந்தத் தூய்மையான மெய்ப் பொருளைப் (ஆத்மா, பரமாத்மா) பிரார்த்தனை செய்து அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். நம்மிடமுள்ள இயல்புணர்வை ஆத்ம பிரார்த்தனை முறையில் மன அலையை மிக நுண்ணிய அளவில் ஒழுங்குப்படுத்தி நம்மைப் பற்றிய உண்மைகளைத் தினமும் நினைவுபடுத்தி உள்ளுணர்வின் மூலம் திடப்படுத்திக் கொள்ளும் நடைமுறைப் பயிற்சியாகும்.
     இயல்புணர்வால் வாழ்க்கையின் புது அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் வாயிலாகப் பொருள்களைப் பற்றிய உண்மையை அறியச் செய்கிறது. ஒவ்வொரு மனிதனோடும் அங்கமாய் உள்ள இயல்புணர்வை முறையாக வெளிப்படுத்துவதன் மூலம் உள்நிறைவு, அமைதி, ஆனந்தம் முதலியவற்றைக் கொண்டு வாழ வழிவகை செய்கிறது.
     இந்நூல் பிரபஞ்ச இயக்க உண்மைகளை உணர்ந்து உயர் வாழ்வுக்கு வழிவகை செய்து நம்முடைய உள்ளார்ந்த தேடுதலின் மூலமாக நம்மைப் பற்றிய இன்னும் கூடுதலான விழிப்புணர்வு பெற இயற்கையோடு முழுமையாக ஒத்திசைந்த ஆற்றலின் வல்லமையை மனிதனின் உணர்வுக்கும், அறிவுக்கும் கொண்டு வந்து மேலும் அதை அனுபவத்திற்கு கொண்டுவந்துவிட்டால் மனிதகுலம் பெறும் பயன் அடையும். இன்று உலகில் நிலவுகின்ற துன்பங்கள் பெறும் அளவில் குறையும்.
      இயற்கையோடு முழுமையாக ஒத்திசைந்த நமது இயல்புணர்வு ஆர்வத்தில் பெற்று அறிந்த மெய் இணைப்பை திரும்ப பெறுவதற்கான பயற்சியால் இந்த திரியை ஒளி பெறச் செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதனால் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்
உணர்ந்து விளக்கம் பெறுவோம்
இயல்புணர்வின் மூலம் விளக்கம் பெறுவோம்
ஆத்மப் பயிற்சியில் இயற்கையின் சக்திகளை உணர்ந்து விளக்கம் பெற்றுக் கொண்டே இருப்போம்”.
-... சென்டர்


No comments:

Post a Comment